Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ரஜினி,விஜய்,பிரபல டிவி என அனைவரையும் வெளுத்துக் கட்டிய விஜய்யின் தந்தை!

Advertisements

தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வருகை நல்லது என்றாலும், அதன் ஆதிக்கம் பல தொழிலாளர்கள் வாழ்க்கையை ஒழித்து கட்டுகிறது. இதில் Qube முறையை நிறுத்த வேண்டும் என மாபெரும் உண்ணாவிரதம் நேற்று சென்னையில் நடந்தது.இதுகுறித்து பேசிய இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் அவர்கள் ‘நடிகர்கள் எல்லோரும் விளம்பரம் மட்டுமே, நாம் பணத்தை போட்டால் தான் அவர்கள் நடிகர்கள், இல்லையெனில் 6 மாதத்தில் அவர்கள் முகம் சுருங்கி வீட்டில் உட்கார்ந்து விடுவார்கள். மேலும், ஒரு தொலைக்காட்சியில் விருது விழா நடத்தினார்கள், இதில் என்னுடைய படம் 2 விருது பெற்றது, ஆனால், ஒரு முறை கூட என் பெயரை சொல்லவில்லை, அது மட்டுமின்றி தொலைக்காட்சியில் ஒரு படத்தை ஒளிப்பரப்பும் போது விஜய், ரஜினி பெயர் மட்டும் சொல்கிறார்கள். நாங்கள் இல்லையெனில் அவர்கள் எப்படி நடிக்க வந்திருப்பார்கள்’ என்று மிகவும் கோபமாக கூறினார்.

Exit mobile version