நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பல துறைகளில் கலக்கி வருபவர் தனுஷ். நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.அப்போது தல அஜித் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதேபோல் விஜய் படத்தில் பாட எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டது.அதற்காக நான் காத்திருக்கிறேன். அவர்கள் இருவரும் (விஜய்,அஜித்) சம்மதம் தெரிவித்தால் நான் கண்டிப்பாக பாடுவேன் என தெரிவித்துள்ளார்