சிவக்குமாரின் இரண்டு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்கள். இவர்களில் சூர்யா பிரபல நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே.இவர் தற்போது தனிக்குடித்தனம் சென்று விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த ஜோதிகா ‘எனக்கு 2வது குழந்தை பிறந்த பிறகு மூட்டு வலியும், முதுகுவலியும் ஏற்பட்டது. இதையடுத்து தி நகர் வீட்டிலிருந்து அடையாரில் உள்ள வீட்டுக்கு நாங்கள் சென்றோம், எனது கொழுந்தனார் மற்றொரு இடத்தில் மனைவியுடன் வசிக்கிறார். விரைவில் நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ உள்ளோம். அதற்காக புதிய பங்களா வேகமாக கட்டப்பட்டு வருகிறது’ என கூறப்படுகிறது.