கமல்ஹாசன் நடிப்பில் மே 1ம் தேதி உத்தம வில்லன் படம் திரைக்கு வரவிருக்கின்றது. ஆனால், அதற்குள் சிலர் வேண்டுமென்றே போட்ட வழக்கால் படம் தள்ளிப்போனது என கூறப்பட்டது.
இதையெல்லாம் உடைத்தெறிந்து படம் கண்டிப்பாக ரிலிஸாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ரூ 1 கோடி பணம் கொடுத்தால் தான் படத்தை ரிலிஸ் செய்ய விடுவோம் என ஒரு சிலர் கூறி வந்தனர்.
இந்த பிரச்சனை என்னவென்றால் விஸ்வரூபம் நேரத்தில் தனக்கு கமல் கொடுத்த குடைச்சலால் பல பண இழப்புகள் நடந்தது. அதெல்லாம் சேர்த்து எனக்கு ஒரு 50 லட்சமும் சங்கத்துக்கு ஒரு 50 லட்சம் மொத்தம் 1 கோடி ரூபாய் கொடுத்தால் தான் படத்தை வெளியிட விடுவோம் என்று சொல்லி இருக்கிறார் சென்னையின் பிரபல திரையரங்க உரிமையாளர் பன்னீர்.
இதை கேட்ட போஸ் ஆடி போய் வேறு வழியில்லாமல் தாணுவிடம் இந்த விஷயத்தை பற்றி சொல்லி இருக்கிறார் அவரும் நான் கேட்கிறேன் என்று பன்னீர் செல்வமிடம் சென்று பேசியுள்ளார், ஆனால் அவர் பேச்சுக்கு அங்கு மரியாதையை இல்லை. என்ன செய்வது என்று யோசித்த போஸ் படம் வந்தால் போதும் என்று அங்கே இங்கே என்று கடனை வாங்கி பன்னீர்செல்வத்துக்கு 50 லட்சம், சங்கத்துக்கு 20 லட்சம் என்று பணத்தை தயார் செய்து கொடுத்துள்ளார் .
இதை கேள்வி பட்ட விநியோகஸ்தர் சங்கம் அவரசமாக Woodlands திரையரங்கில் ஒரு கூட்டம் போட்டது, அதில் போஸுக்கு ஆதரவாக விருது நகர் அப்சரா திரைஅரங்கு உரிமையாளர் அப்சர் மற்றும் மகாராணி திரையரங்கு உரிமையாளர் மகாராணி, பன்னீர் செல்வத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர், அதில் கலந்து கொண்ட ரோகினி பன்னீர் செல்வம் எதுவுமே பேசாமல் அந்த கூட்டத்தை விட்டு கிளம்பினார்.
மேலும் இனிமேல் பன்னீர் செல்வத்துக்கு எந்த வித ஆதரவும் தரக்கூடாது என்றும் அவரின் திரை அரங்குக்கு படங்கள் தருவதில்லை என்று தீர்மானம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில், யார் தடுத்தாலும், என்ன பிரச்சனை வந்தாலும் மே 1ம் தேதி உத்தம வில்லன் வருவது உறுதி என கூறப்பட்டுள்ளது.