Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஆசைக்கு இணங்காத இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை

Advertisements

பரேலி: உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார முயற்சியை எதிர்த்த இளம்பெண்ணை உயிருடன் எரித்துக் கொன்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஷிகணேஷ்பூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை நோட்டமிட்ட பக்கத்து வீட்டு இளைஞர், செல்போனை சார்ஜ் செய்வது போன்று வீட்டிற்குள் சென்று அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் கூச்சலிட்டதையடுத்து, ஆத்திரமடைந்த இளைஞர் அப்பெண்ணின் மீது மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இளம்பெண்ணின் அலறலை கேட்டு அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version