Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

பத்ம பூஷன் விருது பெற்ற ஹிந்துஸ்தானி பாடகி கிஷோரி அமோன்கர் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளை பெற்ற புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகி கிஷோரி அமோன்கர் காலமானார். கிஷோரி அமோன்கர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பை:
புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாரம்பரிய பாடகரான கிஷோரி அமோன்கர் காலமானார். அவருக்கு வயது  85.  உடல் நிலை சரியின்மை காரணமாக மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமடைந்தார்.
பாரம்பரிய இசைக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், அரை நூற்றாண்டு காலம் தனது குரலால் பல்வேறு ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தார்.
கிஷோரி அமோன்கரின் கலைப் பணியை பாராட்டி மத்திய அரசு பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கௌரவித்தது. பள்ளி ஆசிரியர் ஒருவரை திருமணம் கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், பாடகர் கிஷோரி அமோன்கரின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள மோடி,  கிஷோரி அமோன்கர் பற்றிய குறும்படம் ஒன்றினையும் பதிவிட்டுள்ளார்.
Exit mobile version