Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தனியாக வரும் பெண்களுக்கு ஹைதராபாத் ஹோட்டலில் அனுமதி கிடையாதாம்

Advertisements

தனியாக வரும் பெண்களுக்கு ஹைதராபத் ஹோட்டல் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சமூகவலைதளங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த என்.ஆர்.ஐ பெண் கலைஞர் நுபுர் சரஸ்வத். இவர் ஹைதராபாத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு தனியாக வந்துள்ளார். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அவரை தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.இதற்கு பதிலளித்த நிர்வாகம், ” நீங்கள் தனியாக வந்துள்ளதால் உங்களை தங்குவதற்கு அனுமதிக்க வில்லை என்று கூறியுள்ளது.

இதுகுறித்து நுபுர் சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இவருடைய கருத்துக்களை படித்த நெட்டிசங்கள் அந்த ஹோட்டல் நிர்வாகத்தை கடுமையாக சாடிவருகின்றனர். இந்தநிலையில்” தனியாகவோ அல்லது திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு இந்த இடத்தில் பாதுகாப்பு இல்லததால் தங்க அனுமதிக்கப்படவில்லை ” என்று ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version