political

குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: மா.பாண்டியராஜன் பேட்டி

திருநின்றவூர்:

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருமான வரித்துறை சோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் நடந்து கொண்ட விதம் சரியில்லை. அவர் அதிகாரிகளுடன் பிரச்சினையில் ஈடுபட்டது கடுமையான குற்றம்.

அ.தி.மு.க.வில் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும். அ.தி.மு.க. இரு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு பலவீனமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். அவர்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

விவசாயிகள் பிரச்சினைக்கு தி.மு.க.தான் காரணம். விவசாயிகள் பிரச்சினை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் ஓ.பி.எஸ். அணி பங்கேற்காது. தி.மு.க. வின் அனைத்து கட்சி கூட்டம் போலித்தனமானது.

காவிரி பிரச்சினை பற்றி சட்டசபையில் பேச தி.மு.க.வுக்கு துணிவு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.