political

போலீஸ் அதிகாரியால் கன்னத்தில் அறையப்பட்ட பெண்ணின் காது கேட்கும் திறன் பாதிப்பு

சாமாளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ந்டத்திய பெண்ணின் கன்னத்தில் போலீஸ் அதிகாரி அடித்ததால் கேட்கும் திறனை பெண் இழந்துள்ளார்.

சாமாளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி னர். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டிய ராஜன்  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைகளால் சரமாரியாக தாக்கினார். அவர் ஈஸ்வரி என்ற பெண்ணை கன்னத்தில் ஓங்கி அறைந்ததோடு,  விரட்டி விரட்டி தாக்கினார். இதில் ஈஸ்வரிக்கு காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்கள், பொதுமக்கள்  மீது போலீசார் தடியடி நடத்தியதை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் போலீசார் தாக்கினர். போலீசாரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் கண்ட னம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி (45) என்ற பெண்ணின்  கன்னத்தில் காட்டுமிராண் டித்தனமாக  ஓங்கி அறைந்த காட்சிகள் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவுகிறது.

இதை பார்க்கும் அனைவரும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மேற்கு மண் டல போலீஸ் ஐ.ஜி. பாரியிடம் கேட்ட போது, தடியடி சம்பவம் தொடர்பாக டி.ஐ.ஜி. தீபக் தாமோர் விசாரணை நடத்துவார் என்றார்.