political

இணைய வேண்டுமானால்..! பழனிசாமி அணியை அதிரவைக்கும் பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனைகள்!

சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தினகரனை ஒதுக்கி வைக்கிறோம் என்று சொன்னதால் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளோம். தினகரன் ஒதுங்கியதை வரவேற்கிறோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும். அதற்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை வாபஸ் வாங்க வேண்டும். சசிகலா,தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும். கட்சியில் இருந்து இருவரையும் வெளியேற்றுவதை அறிக்கையாக வெளியிட வேண்டும். சசிகலா குடும்பத்தில் உள்ள 30 பேரையும் நீக்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் இணைவோம். இல்லையென்றால், பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டோம். நாங்கள் முதல்வர் பதவியோ, பொதுச்செயலாளர் பதவியோ கேட்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறி அமைச்சர்கள் தான்தோன்றி தனமாகக் கூறி வருகிறார்கள். பேச்சுவார்த்தை என்றுக் கூறி அழைப்பு விடுத்து, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் அவமானப்படுத்தி வருகின்றனர். விரும்பினால் நீங்கள் தனியே செல்லுங்கள். பேச்சுவார்த்தை என்று இப்படி நடந்து கொள்வது நல்லதல்ல. தினகரனை வெளியேற்றிவிட்டதாக நாடகமாடுகின்றனர். கருணாநிதியின் வெற்றிடத்தை பன்னீர்செல்வம் நிரப்புவார். மக்கள் செல்வாக்கு இல்லாமல் சசிகலா அணியினர் உள்ளனர். தேர்தல் நடந்தால், பன்னீர்செல்வம்தான் வெற்றி பெறுவார். நாங்கள் மக்களை சந்திக்கிறோம். பன்னீர்செல்வத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று தொண்டர்கள் கூறி வருகின்றனர். சசிகலா தயவால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி எப்படி செயல்பட முடியும்? யாரோ ஒருவரின் பாதுகாப்பில் விஜயபாஸ்கர் இருந்து வருகிறார். மிரட்டல் விடுத்ததால்தான் எம்.எல்.ஏக்கள் அங்கு உள்ளனர்.