Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஒத்த தட்டு தராசு|வெள்ளைக் கோல்வரை | Single Plate Weigher of Ancient TamilNadu

ஒத்த தட்டு தராசு - Single plate weigher

ஒத்த தட்டு தராசு - Single plate weigher

Advertisements

ஒத்த தட்டு தராசு

Single Plate Weigher of Ancient TamilNadu -படத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு.

இத நம்ம ஊர்ல ‘வெள்ளிகாவரை’ ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, தூக்குகோல்ன்னும் சொல்லுவாங்க. ‘வெள்ளைக்கோல்வரை’ங்கிற
சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம்ம வாய்களுக்குள்ள நுழஞ்சி சிதஞ்சி வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு.

அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க.

அதனாலதான் இந்த பேரு. அந்த கோடுங்கதான் எடைகளுக்கான குறியீடுங்க. பொதுவா தாரசுன்ன இரண்டு தட்டு இருக்குறது வழக்கம்.

ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டியத வைக்க. ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது. அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க.

தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த.கோட்டுலயே கயித்த இறுக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான்.

கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல பாக்க தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம்.

கோல் கீழபாக்க தாந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு.

இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல. இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும். ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல.

இன்னக்கு ரயில்வே ஸ்டேசன், லாரி ஆபீஸ் மாதரி இடங்களில பண்டங்கள நிறுக்க பயன்படுத்தப்படுகிற ‘பிளாட்பாரம் பேலன்ஸ்’ங்களுக்கு மூலம் நம்ம தாத்தாங்க கண்டுபிடிச்ச ஒத்தத்தட்டு தராசு தான். நாம டெவலப் பண்ணியிருக்க வேண்டிய நம்ம தாத்தாக்களோட தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திகிட்டு இருக்கான். நாம வேடிக்க பாத்துகிட்டு இருக்கோம்.

என்ன கொடுமை சார் இது?……..


திருவள்ளுவர் சொன்ன “சமன் செய்து சீர்தூக்கும் கோல்” இது தான். இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல்ங்கிறது வேற ஒண்ண ஞாபாகப்படுத்துது. தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம்ன்னு ஒரு பேரு இருக்கு.

இந்த பேரு எதுக்குன்னா சூரியன் துலாரசில சஞ்சரிக்குற மாதம் இது. சூரியன் துலா ராசில நுழையுற நாள் அன்னக்கி பூமில பகலும் ராத்திரியும் சம நீளத்துல இருக்கும்.

அதாவது பகல் 12 மணி நேரம் ராத்திரி 12 மணி நேரம். மத்த நாளையில எல்லாம் பகலுக்கும் ராத்திரிக்கும் நீளத்துல கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும்.

எனவே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம்ன்னு பேர் வ்ச்சிருக்கிறாங்க நம்ம தாத்தாங்க.

இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம்ம ஒத்ததட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கு. இப்படி வானியல், கண்க்கு, கணகீடு, சமானம்ன்னு நம்ம தாத்தாங்களோட பன்முக அறிவு செழிப்பை நினச்சி பாக்கையில நம்மால் ஆ….ன்னு வாய பிளக்கதான் முடியுது.

நம்ம தாத்தாங்களோட அறிவு தொடர்ச்சி கண்ணி நம்ம விட்டு எப்ப, எங்க அறுந்து போச்சுங்கிற கேள்விதான் பதில் இல்லாம நம்ம முன்னால நின்னுக்கிட்டு இருக்கு…….

  புடைப்பு சித்திரம்

இந்தப்புடைப்புச் சித்திரம் சிபி சக்கரவர்த்தி புறாவின் உயிரை காப்பாற்ற தன் தொடைக்கறியை வெட்டி ஒற்றைத்தட்டுத் தராசில் நிறுத்து கழுகுக்குக் கொடுக்கும் காட்சியை சித்தரிக்கிறது.

இந்தச் சிற்பம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை கொண்டது ஒத்தத்தட்டு தராசு என்பதற்கான வரலாற்று சான்று இந்தப் புடைப்புச் சிற்பம்.

Exit mobile version