கல்லூரிக் காலம்- நம்
மனத்தோடு மழைக் காலம்
கனவகளொடு வந்த நம்மை கண்களால் மிரட்டிய ஆசிரியப் பட்டாளம்….
சில்லென்ற சந்திப்பால் தோழன்/ தோழியோடு மறு நாட்கள்…
கலவரமாய் மாறிய கட்டுப்பாடுகள்,
கண் பிதுங்காவைத்த விதிமுறைகள்…….
மகிழ்ச்சியாய் தொடங்கிய விடுமுறைகள்,
மறுகணமே மனம் வதைத்த கொடுவினைகள்…..
ஆசிரியரின் விடுமுறைக்காய் செபிதத பிராதானைகள்,
நண்பனின் விடுமுறையால் வருடமாகிய வகுப்பறை நொடிகள்….
மின்னலாய் வந்த தேர்வுகள்
இடி போல் வந்த தேர்வு முடிவுகள்..
அருகாமை கிடைத்த மகிழ்ச்சியில் ARRIYER-UM அல்லேட்டாக மாற்றிய தருணங்கள்…
நண்பனின் தோல்வியில் மகிழ்ந்த நொடிகள்!!!!
நண்பனின் வெற்றியில் பொரிந்த கணங்கள்… !
கட் அடித்து காதல் செய்த காதலர்கள்,,
பிட் அடித்து மாட்டி கொண்ட வீரர்கள்……
மனிதனாய் பிறந்தால் தாய் ஒருத்திி என்பதை மாற்றிய தோழிகள்,,,,
தந்தைக்கு நிகர் தான் என்று காட்டிய தோழர்கள்…
கண் விழித்து தூங்கிய வகுப்பரைகள்,,
கண் மூடி தூங்க மறுத்த இரவுகள்…
சலசலவென தொடர்ந்த சண்டைகள்,,
சத்தமில்லாமல் இணைந்த மறு நொடிகள்…
ஓரக் கண் பார்வைகள்,,
ஓயாமல் கண்ட கனவுகள்…..
போட்டி இன்றி படித்த நாட்கள்,,
போட்டி போட்டு எடுத்த புகைப் படங்கள்…
கை மாறும் உணவுகள்,,
கை கோர்த்து நடந்த சுற்றுலக்கள்…
காசு இன்றி ஏங்கி நின்ற உணவகம் முன்,,
கால் மேல் கால் போட்டு உண்ண வைத்த என் நண்பர்கள்….
மீண்டும் வருமா இந்த நாட்கள்???
கண்ணீரில் தொலைந்தால்- கண்ணீர் துடைக்க வரும் கரங்களும்,,,,,,
இடம் இன்றி சென்ற நாட்கள் அது!!!!
கண்ணீரில் தொலைகிரேன் இன்று
கண்ணீர் துடைக்க கரங்களை தேடுகிறேன்- உங்கள் நினைவகளொடு….
கல்லூரி காலம் முடிந்தாலும்- தொடரும் என்றும் நாம் மனத்தோடு நம் மழைக் காலம்!!!!!!!!!!
~Anu