உலகிலேயே மிகச் சிறிய பறவையான ஹம்மிங் பறவை கடல் கடந்து பறந்து செல்லும் என்று சொன்னால் உங்களுக்குச் சந்தேகம் தோன்றலாம். ஆனால் அது உண்மைதான். அமெரிக்காவில் காணப்படுகின்ற சிவப்புக் கழுத்து ஹம்மிங் பறவைகள் தான் மிக அதிகமான தொலைவு பறந்து செல்கின்றன. அமெரிக்காவில் பனிக்காலம் ஆரம்பித்தவுடன் இவை கூட்டமாக மெக்ஸிகோவிற்கும், கியூபாவிற்குமெல்லாம் பறந்து போகும். 800 முதல் 3,000 கிலோ மீட்டர் தூரம் வரை இவை பறந்து செல்கின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள்.