Technology

கூகுள் வி.ஆர். ஹெட்செட் மூலம் பகல்கனவு காணுங்கள்!

கூகுள் நிறுவனம் டே-ட்ரீம் வியூ என்ற புதிய வெர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெர்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் காட்சிகளைப் பார்ப்பதற்கான புதிய வி.ஆர். ஹெட்செட் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் மட்டும் விற்பனைக்கு வந்த கூகுள் நிறுவனத்தின் டே-ட்ரீம் வி.ஆர். ஹெட்செட் இன்று முதல் இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.6499க்கு ப்ளிப்கார்ட் மூலம் விற்கப்படும் இந்த வி.ஆர்..ஹெட்செட் யூ-ட்யூப் வி.ஆர்., ஸ்ட்ரீட் வியூ, ப்ளே மூவீஸ் போன்ற அப்ளிகேஷன்களுக்கு பயன்படுத்தலாம்.

கூகுள் பிக்ஸல், மோட்டோ Z போன்ற மொபைல்களுடன் இணைத்து இதனை பயன்படுத்த முடியும். சாம்சங் எஸ்8, எஸ்8 ப்ளஸ் ஆகிய மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் அப்டேட்கள் விரைவில் கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ப்ளிப்கார்ட் மூலம் கூகுள் டே-ட்ரீம் வியூ வி.ஆர். ஹெட்செட் வாங்கும் முதல் 30 பேருக்கு கூகுள் குரோம்காஸ்ட் இலவசமாகக் கிடைக்கும். அடுத்த 50 வாடிக்கையாளர்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் ரூ.500 க்ரெடிட் செய்யப்படும்.

கூகுளின் இந்த வி.ஆர். ஹெட்செட் ஒரு வருட வாரண்டியுடன் விற்கப்படுகிறது.