சரக்குகளை உலகம் முழுவதும் விநியோகம் செய்ய, கண்டெய்னர் சேவையில் ஈடுபட்டுள்ள மேர்ஸ்க் நிறுவனம் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகில் நடக்கும் கப்பல் கண்டெய்னர் சேவையில் 7ல் ஒரு கண்டெய்னர் தன் வசம் வைத்துள்ள மிகப்பெரிய நிறுவனம் ஏ.பி.முல்லர் – மேர்ஸ்க். இந்நிறுவனத்தின் சர்வரை ரேன்சம்வேர் வைரஸ் தாக்கியுள்ளதாக, நிறுவனத்தின் ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலகளவில் நடைப்பெறும் எங்கள் கப்பல் கண்டெய்னர் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது பயணத்தில் உள்ள 600 கண்டெய்னர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. வைரஸ் தாக்குதல் காரணமாக நிறுவனத்தின் தகவல்களை அறிவதில் மொத்தமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது,விரைவில் இந்த பிரச்னையை தீர்க்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.