நியூ யார்க்:
அமெரிக்காவில் தன் நண்பர் குறித்து பொய்யான பேஸ்புக் போஸ்ட் செய்த பெண்மணிக்கு 500,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடியே 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தன் மகன் கொலை செய்யப்பட்டதாக வடக்கு கரோலினாவை சேர்ந்த ஜாக்குலின் ஹாம்மோண்ட் 2015-இல் டுவெயின் டயல் என்பவர் குறித்து போஸ்ட் செய்திருந்தார். ஜாக்குலின் போஸ்ட் பார்த்து மனம் வருந்திய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டுவெயின் தன் மீது பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் வடக்கு கரோலினா நீதிமன்ற நீதிபதி, ஜாக்குலினுக்கு $5,00,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடியே 24 லட்சம்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் போஸ்ட்களை பதிவு செய்ய எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஹாம்மோண்ட் தொடர்ந்து பொய்யான தகவல்களை ஓரிரு ஆண்டுகளாக பதிவு செய்து வந்துள்ளார். அவை என் மனதை வெகுவாக பாதித்தது என டயல் தெரிவித்துள்ளார்.