UberFacts

சிவப்புக்கோள் செவ்வாய்! அறியாத விஷயங்கள்

பாறைக்கோளமான செவ்வாய்க்கு ரோமானிய போர் கடவுளின் பெயர் (மார்ஸ்) சூட்டப்பட்டுள்ளது.

*பூமியின் ஈர்ப்புவிசையில் 37 சதவிகிதம்தான் செவ்வாயில் இருப்பதால் பூமியில் எம்பிக் குதிப்பது போல் குதித்தால் 3 மடங்கு உயரத்தில் மிதப்பீர்கள்.

*செவ்வாயில் உள்ள உயரமான எரிமலைக்கு ஒலிம்பஸ் மோன்ஸ் என்று பெயர். 21 கி.மீ நீளம், 600 கி.மீ சுற்றளவில் இது பூமியின்
எவரெஸ்ட் சிகரத்தையும் விட உயரமானது.

*செவ்வாய்க்கு போபோஸ், டெய்மோஸ் என 2 நிலவுகள் உண்டு. கிரேக்க கடவுளான ஏரிஸ் பயணிக்கும் தேர்க்குதிரைகளின் பெயர்களே இந்த இரு நிலாக்களின் பெயர்களாகும்.

*செவ்வாய் கோளின் மண் சிவப்பாகத் தெரிய, அதில் அதிகமுள்ள  இரும்பு ஆக்சைடே காரணம்.

*சூரியனிலிருந்து 4-வது கோளான செவ்வாயில், ஒரு நாள் என்பது 24 மணி நேரம் 39 நிமிடங்களாகும்.

*பூமியைப்போலவே எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பருவநிலை மாறுதல்களும் செவ்வாயில்(4 பருவங்கள்) உண்டு.