Business Entertainment Images Uncategorized

பணம் சம்பாதிப்பது மட்டும் வாழ்கை ஆகாது

சென்னையில் வசிக்கும் ஒரு வயதானவர் நியூயார்க்கில் இருக்கும் தன் மகனுக்கு டெலிபோன் செய்து சொன்னார்..

“உன்னோட நாளை நான் கெடுக்க விரும்பவில்லை…ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும்..நானும்,உன் அம்மாவும் விவாகரத்து செய்து கொள்கிறோம்…35 வருட திருமண வாழ்க்கை …அனுபவிச்ச கொடுமை போறும்”

‘அப்பா..என்ன சொல்லறீங்க ” மகன் அலறினான் .

“நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க கூட பிடிக்கலை” .

“நான் இதை பத்தி பேச கூட விருப்பமில்லை ..அதனால
ஹாங்காங்ல இருக்கற உன் அக்காக்கு நீயே சொல்லிடு ” என்றார்

பதட்டத்துடன் அவன் ..அக்காக்கு போன் செய்து வெடித்தான் .
அவள்” என்ன காரணத்துக்காக இவர்கள் இப்படி செய்கிறார்கள் ..நீ விட்டுடு..இதை நான் பார்த்து கொள்கிறேன் ” என்றாள்.

உடனே சென்னைக்கு போன் செய்து அந்த வயதான அப்பாவிடம் கத்தினாள்… இப்போ எதற்காக விவாகரத்து என்று அடம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டாள் .

பின் இது சம்மந்தப்பட்ட எந்த ஒரு சின்ன முடிவும் அங்கு எடுக்க கூடாது ..நானும் ,தம்பியும் உடனேயே கிளம்பி வருகிறோம், புரிந்ததா? என்று கேட்டு போனை வைத்தாள்.

அந்த வயதான அப்பாவும் போனை வைத்து விட்டு மனைவியிடம் திரும்பி….கவலைபடாதே..எல்லாம் சரிதான்…குழந்தைகள் இருவரும் தீபாவளிக்கு இங்கு வருகிறார்கள் என்றார்.

கதை நல்லா இருக்கா …….ஆனா இதுல ஒரு நீதி இருக்கு ..

நீதி : பணம் சம்பாதிப்பது மட்டும் வாழ்கை ஆகாது. சொந்தங்களும் வாழ்கையின் சந்தோஷத்தின் ஒரு பகுதி..