Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை

 தேவையான பொருட்கள்:

காளான் – 2 கப்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1 கப்
கிராம்பு – 2
பூண்டு – 2
எண்ணெய் – தேவைக்கு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை தண்டி வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு வேகும் அளவு சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

* 10 நிமிடம் ஆன பின்பு அத்துடன் காளானை போட்டு கிளறி, மூடி வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* காளான் மற்றும் உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் உப்பு, கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

* சுவையான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி!!!

Exit mobile version