Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

இங்கிலாந்து- கனடா குழந்தைகள் அதிக நேரம் அழுகின்றன: ஆய்வில் தகவல்

இங்கிலாந்து, கனடா மற்றும் இத்தாலியில் பிறக்கும் குழந்தைகள் அதிக நேரம் அழுது கொண்டே இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டன்:

பிறந்த பச்சிளங் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருக்கின்றன. பல குழந்தைகள் இரவு நேரங்களில் தூங்காமல் பெற்றோரை கடும் துயரத்துக்கு ஆளாக்குகின்றன.

இதுகுறித்து வார்விக் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பிறந்தது முதல் 3 மாதங்களில் நீண்ட நேரம் அழுது அடம் பிடித்து தொந்தரவு செய்யும் குழந்தைகள் குறித்த ஆய்வும், பட்டியலும் தயாரிக்கப்பட்டது. இதில் உலக நாடுகளின் குழந்தைகள் இடம் பெற்றனர்.

அதில், பிறந்தது முதல் 12 வாரங்கள் வரையிலான குழந்தைகள் இடம் பெற்றனர். கடும் வயிற்று வலி காரணமாக குழந்தைகள் அழுகின்றன.

அதில், ‘‘இங்கிலாந்து- கனடா மற்றும் இத்தாலியில் பிறக்கும் குழந்தைகள் அதிக நேரம் அழுது கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் டென்மார்க் மற்றும் ஜெர்மனி குழந்தைகள் சிறிது நேரம் அழுது விட்டு தானாகவே சமாதானமாகி தூங்கி விடுகின்றன என தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரமும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களும் அழுகின்றன. அதுபோன்று கனடா, இத்தாலியிலும் குழந்தைகள் வயிற்று வலியால் அழுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version