இப்போது இணையத்தளம் சண்டைக்களம் என்றே மாறிவிட்டது. அதன் படி இப்போது இணையத்தளத்தில் அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை மற்றவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது . இதில் அஜித் ரசிகர்கள் தேவையில்லாமல் விஜய்யை கலாயித்து வருவதாக பெரும்பாலனோர் கருத்து தெரிவித்து வருகின்றனர் . அதை பற்றிய ஒரு குறிப்பு:
திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் செம்மர கடத்தல் தொடர்பாக 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தமிழ் நடிகர்களிடையேயும் வெறுப்பை ஏற்படுத்தியது. ஆனால் குற்றம் குற்றமே என்ற கணக்கில் எந்த போராட்டம் நடத்தாமல் விட்டு விட்டனரா? என தெரியவில்லை.
இச்சம்பவம் நடக்கும் முன் விஜய்யின் புலி படத்தின் படப்பிடிப்பு வெகு நாள்களாக பெரும்செலவில் ஆந்திராவில் நடந்துவந்தது. அதில் பிரமாண்ட செட்களையும் போட்டு
படபிடிப்பு நடத்தினர். படபிடிப்பு நடக்கும் இடத்தின் அருகில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனாலும் படக்குழுவினர் எந்த மாற்றமும் இன்றி படபிடிப்புகளை நடத்தினர்.
இப்படியிருக்கும் நிலையில் அண்மையில் தல-56 படத்தின் படபிடிப்பு கொல்கத்தாவில் நடக்க இருந்தது. படத்தின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு அதை ஆந்திராவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவில் படபிடிப்பு வேண்டாம் என அஜித் சொன்னதாக சமீபமாக செய்திகள் வந்தது. இதை வைத்து கொண்டு அஜித் ரசிகர்கள் எங்க தல தான் பெஸ்ட் , அவர்
ஆந்திரா அரசு தமிழர்களை கொன்றதற்காக ஆந்திராவில் படபிடிப்பு நடத்த கூடாது என டைரக்டர் சிவாவுக்கு கட்டளையிட்டுள்ளார் . ஆனால் உங்க தளபதி
தமிழ் மக்களை சுட்டு கொன்ற பிறகும் தமிழ் இன உணர்வின்றி படபிடிப்பு நடத்தினார். ஆனால் ஒரு சில ரசிகர்கள் , விஜய் தமிழ் உணர்வு கெட்டவர், இரக்கம் ,
மனசாட்சி இல்லாதவர் என கூறிவருகின்றனர். ஒரு சிலரோ வழக்கம் போல் கெட்ட வார்த்தைகளால் கலாயித்து வருகின்றனர். இதற்கு பதில் விஜய் ரசிகர்களும்
சண்டை இட்டு வருகின்றனர். இதை பார்த்த பொது உணர்வாளர்கள் சிலர் இது தேவையில்லாத சண்டை. இப்படி வசை பாடுவது விஜயைக்கு நன்மைதிப்பையே ஏற்படுத்தி தரும் , இதன் காரணமாகவே விஜயின் மதிப்பு உயர்ந்து வருவதாகவும், ஒரு சிலர் ‘அஜித் படபிடிப்பு இனிமேல் ஆந்திராவில் நடக்காமல் இருந்தால் சரி’ எனவும்
கூறுகின்றனர். ஒரு சிலர் அங்கு கோடி கணக்கு செலவு செய்து செட் போட்ட பிறகு எப்படி மாற்றமுடியும் எனவும் கூறுகின்றனர். ஒரு சில ரசிகர்கள், இப்படியிருந்தும்
விஜய் அந்த இடத்து மக்களிடம் எவ்வளவு அன்பாக பழகினார் என கூறினர். ஒரு பிரபல சினிமா தயாரிப்பாளர் கூறுகையில்,” இரு ரசிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் , இதுவே அவர்களுக்கு
நன்மதிப்பை பெற்று தரும். ‘உங்கள் வாழ்க்கையை பார்க்க வேண்டும் ‘ என இரு நடிகர்களும் கூறி உள்ளனர்.”.