அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார். இவர் தமிழுக்கு அறிமுகமாகவது இந்த படம்தான். விவேக் ஓபராய் எப்போதும், யாருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லலிதா என்ற பெண்ணுக்கு விவேக் ஓபராய் தங்குவதற்கு வீடும், அவருடைய வருமானத்திற்கு தனது கம்பெனியில் வேலையும் கொடுத்து உதவியிருக்கிறார். உலக மகளிர் தினத்தில் தனது கர்ம் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களிடம் லலிதாவை அறிமுகமும் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து விவேக் ஓபராய் தரப்பில் கூறும்போது, சமீபத்தில் லலிதாவை சந்தித்து பேசியியுள்ளார் விவேக் ஒபராய். அப்போது, லலிதா தான் வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும், வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது திறமையை பார்த்த விவேக் ஓபராய் தனது நிறுவனத்தையிலேயே லலிதாவுக்கு வேலை கொடுப்பதாகவும், தங்குவதற்கு சொந்தமாக வீடு கொடுப்பதாகவும் உறுதி கொடுத்துள்ளார்.
விவேக் ஓபராய் அஜித்தின் ‘விவேகம்’ மட்டுமில்லாது பிரபாஸ் அடுத்து நடிக்கவிருக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.