Business

தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு

சென்னை:

தங்கம் விலை ரூ.352 உயர்ந்து பவுன் ரூ.22,512-க்கு விற்கிறது.

சில நாட்களாக தங்கம் விலை ஸ்திரமற்ற நிலையில் ஏறி இறங்கி வருகிறது. கடந்த 3-ந்தேதி பவுன் ரூ. 22 ஆயிரத்து 120 ஆக இருந்தது. மறுநாள் 4-ந்தேதி ரூ.232 உயர்ந்து ரூ. 22 ஆயிரத்து 352-க்கு விற்றது.

அதன் பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. நேற்று ரூ.22 ஆயிரத்து 160 ஆக இருந்தது. இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.352 உயர்ந்தது.

ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 512 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.352 அதிகாரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,814-க்கு விற்கிறது.

தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட கார ணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளி ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 100 ஆக உள்ளது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து இதே விலை நிலவுகிறது. அதே நேரத்தில் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.45.60 ஆக உள்ளது.