Business

ஃப்ளிப்கார்ட்டுடன் இணையும் ஈபே இந்தியா!

உலக அளவில் இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஈபே நிறுவனத்தின் இந்தியக் கிளை நிறுவனமான ஈபே இந்தியா,  இந்தியாவின் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டுடன் இணைந்துள்ளது.

ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் ஈபே இந்தியா நிறுவனமும் கூட்டாக இணைவதன் மூலம் மற்ற இணையதள வர்த்தக நிறுவனங்கள் பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைப்புக் குறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம், ‘இந்த ஒப்பந்தம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் தொடங்கி உருவான எங்கள் நிறுவனம், மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் பிரச்னையைத் தீர்ப்பதில் முனைப்புடன் இயங்குகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து ஈபே நிறுவனம், ‘ஈபே நிறுவனத்தின் உலகளாவிய இணையவழி வர்த்தக நிலையும், ஃப்ளிப்கார்ட்டின் இந்திய மதிப்பும், இரு நிறுவனங்களின் வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் பன்மடங்கு அதிகரிக்கும்’ என்று கூறியுள்ளது.