புதுடெல்லி:
ஐடியா செல்லுலார் மற்றும் பிளிப்கார்ட் இணைந்து அதிகம் விற்பனையாகும் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்த சலுகை பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடியா பிரீபெயிட் வாடிக்கையாளர்களில் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு அப்கிரேடு செய்வோருக்கு ரூ.191 மற்றும் ரூ.356 மதிப்பிலான விசேஷ ரீசார்ஜ் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்தியேக விலை, எக்சேஞ்ச் சலுகை மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது.
பிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகும் லெனோவோ, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா மற்றும் பானாசோனிக் உள்ளிட்ட நிறுவனங்களின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் புதிய சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4,000 முதல் ரூ.25,000 வரையிலான ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு அதற்கேற்ற சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது. இதுதவிர புதிதாய் ஐடியா நெட்வொர்க்கில் இணையும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படும் என ஐடியா செல்லுலார் தெரிவித்துள்ளது.