Business Technology

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய வசதி: பயன்படுத்துவது எப்படி?

புதுடெல்லி:
வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் மேல் வைத்து கொள்ள முடியும்.
பின் (Pin) செய்ததும் குறிப்பிட்ட கான்வர்சேஷன் மற்றவர்கள் மெசேஜ் அனுப்பினாலும் முதலில் இருக்கும். அதகபட்சம் மூன்று முக்கிய குரூப் அல்லது தனி சாட்களை பின் (Pin) செய்ய முடியும். அடிக்கடி சாட் செய்வோருடன் எளிதாக பதில் மெசேஜ் அனுப்ப இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
வாட்ஸ்அப்பில் சாட் பின் (Pin) செய்ய, குறிப்பிட்ட குரூப் அல்லது காண்டாக்டினை அழுத்தி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்ததும் மெசேஜை டெலீட் செய்ய கோரும் பட்டனுக்கு அருகில் பின் செய்ய கோரும் ஆப்ஷன் தெரியும்.
இதே போல் சாட் அன்பின் (Unpin) செய்ய மீண்டும் காண்டாக்ட் அல்லது குரூப்பினை அழுத்தி பிடித்து அன்பின் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய வசதி மேம்படுத்தப்பட்ட பதிப்பில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வாட்ஸ்அப் பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.