Indians

இனி ’டிராபிக் போலீஸ்’ அபராதத்தை பே.டி.எம்.,மில் செலுத்தலாம்!

புதுடெல்லி: இனி ‘டிராபிக்’ போலீஸாரின் அபராதத்தையும் பேடிஎம்மில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நவீன டெக்னாலஜி உலகில், ஒரே விரலில் எல்லாமே ஆன்லைனில் செய்துவிடலாம். அதற்கு முன் உதாரணமாக மத்திய அர்சு அனைத்து வசதிகளையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. அந்த வகையில் இனி டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராததையும், ஆன்லைனில் செலுத்தலாம்.

இதற்காக மொபைல் பேமண்ட் எனப்படும் பேடிஎம் நிறுவனத்துடன் தேசிய டிராபிக் போலீஸார் கைகோர்த்துள்ளனர். இதன் மூலம் இனி டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராதங்களை பேடிஎமில் செலுத்தலாம்.

இதில் நீங்கள் பணம் செலுத்தியவுடன், டிஜிட்டல் இன் வாய்ஸ் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். தொகை பெறப்பட்ட பின். அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ஆவணங்கள் அனைத்து தபால் மூலம் அவரை வந்துசேரும்.

இதை செலுத்த, பேடிஎம்., ஆப் மூலம் லாகின் செய்து, அதில் டிராபிக் சலான் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் வண்டியின் நம்பரை பதிவு செய்து பணம் செலுத்த வேண்டும். தற்போதைக்கு இந்த வசதி மும்பை, புனே, விஜயவாடா நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நகரங்களிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.