Home » குத்து சண்டை கதாநாயகி amyjackson ……….
Cinema Flash News Tamil

குத்து சண்டை கதாநாயகி amyjackson ……….

பிரபுதேவா டைரக்டு செய்யும் இந்தி படத்துக்காக நடிகை எமிஜாக்சன் குத்துச்சண்டை கற்றுக்கொள்கிறார்.

எமிஜாக்சன்

விக்ரம் ஜோடியாக எமிஜாக்சன் நடித்த ‘ஐ’ படம் வெற்றி பெற்றதையடுத்து, தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் எமிஜாக்சனும் இடம்பெற்று இருக்கிறார். இதுபோல் இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாகும் முயற்சியில் எமிஜாக்சன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

மும்பையிலே தங்கி அவர் வாய்ப்பு தேடி வந்தார். அவருடைய தீவிர முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஏற்கனவே ‘ஏக் திவானா தா’ என்ற இந்தி படத்தில் அவர் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மறு பதிப்பு ஆகும்.

தமிழில் வெற்றி பெற்ற ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ இந்தியில் வெற்றி பெறவில்லை. இதனால் எமிஜாக்சன் துவண்டு போனாலும், அவருடைய தீவிர முயற்சியை கைவிடவில்லை.

கீர்த்தி சனோன்

பிரபுதேவா டைரக்டு செய்யும் ‘சிங் இஸ் பிளிங்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக எமிஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தில் அக்ஷய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘சிங் இஸ் பிளிங்’ படத்தில் முதலில் கதாநாயகியாக கீர்த்தி சனோன் பேசப்பட்டார். திடீரென்று அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதில் எமிஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

எமிஜாக்சனுக்காக பிரபுதேவா சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. அவருடைய சிபாரிசை படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனும் ஏற்றுக்கொண்டார்கள்.

குத்துச்சண்டை

இந்த படத்தில் எமிஜாக்சன் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக அவர் குத்துச்சண்டை கற்றுக்கொள்கிறார். அதேபோல், ‘சல்சா’ நடனமும் கற்றுக்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து இந்தி பட உலகில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடிக்க வேண்டும் என்று எமிஜாக்சன் ஆசைப்படுகிறார். இதற்காக அவர் மும்பையிலே முகாமிட்டு இருக்கிறார்.

About the author

livingston

Add Comment

Click here to post a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.