political

கனமழையால் நிலச்சரிவு: ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது

 ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

இந்நிலையில், கனமழையால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் நடுரோட்டில் விழுந்ததால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து நெடுஞ்சாலை மூடப்பட்டு, சாலைகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலையில் பனிஹல்-ராம்பன் இடையே உள்ள பல்வேறு பகுதிகள் தற்போது சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டிருப்பதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 9-ம் தேதி வானிலை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.