political

ஆஸ்திரேலியா பிரதமர் மால்கோம் டர்ன்புல் அடுத்த வாரம் இந்தியா வருகை

 மெல்போர்ன்:

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்-ஐ சந்தித்தார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் புதுடெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்று மால்கோம் டர்ன்புல் அடுத்த வாரம் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அவருடன் கல்வித்துறை மற்றும் தொழில் பயிற்சித்துறை மந்திரி சைமன் பிரிமிங்ஹம், ஆஸ்திரேலிய நாட்டின் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட பெரிய குழுவினரும் டெல்லி வருகின்றனர். எனினும், எந்த தேதியில் அவர் இந்தியா வருகிறார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

About the author

Julier