மெல்போர்ன்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் முட நீக்கியல் துறை நிபுணராக பணியாற்ற இந்தியாவை சேர்ந்த ஷியாம் ஆச்சாரியா என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு இந்நாட்டுக்கு வந்துள்ளார்.
2003-ம் ஆண்டிலிருந்து 2014 வரை சுமார் 11 ஆண்டு காலம் அந்த மருத்துவமனையிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள மூன்று இதர மருத்துவமனைகளில் உதவி டாக்டராக பணியாற்றிய ஆச்சாரியா, அந்நாட்டின் குடியுரிமையை பெற்றதுடன், ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றையும் வாங்கினார். ஆஸ்திரேலிய நாட்டு குடிமகன் என்ற வகையில் அந்நாட்டு பாஸ்போர்ட் ஒன்றையும் பெற்ற வெற்றிகரமாக தொழில் நடத்தி வந்தார்.