Home » விண் வெளியில் அழகான உணவுவிடுதி – ரஷ்யா உருவாக்கம்
Technology

விண் வெளியில் அழகான உணவுவிடுதி – ரஷ்யா உருவாக்கம்

ரஷ்யாவை தலைமை இடமாக கொண்ட Orbital Technologies தனது அடுத்த வருட திட்டமாக விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப உள்ளது . ராக்கெட்டில் இதற்கான இடத்தை அதிகரிக்க உள்ளது . அவ்வாறு விண்வெளிக்கு செல்பவர்களுக்கு வசதியாக 4 தனி அறைகள் அமைக்க பட உள்ளது .

இங்கு 0 புவி ஈர்ப்பு விசையை உணர முடியும் . மேலும் அங்கிருந்து பூமியின் அழகை ரசிக்க முடியும் என்றும் இதன் தலைமை இயக்குனர் தெரிவித்து உள்ளார் . இவர்களை போல மேலும் 9 நிறுவனங்கள் சாதாரண மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் பணிகளில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இனிமேல் விண்வெளிக்கு செல்வது சர்வ சாதாரணம் ஆகிவிடும் என்பது சந்தேகம் இல்லை ..