Home » அசத்தல் அம்சங்கள் வெளியாகும் கூகுள் லென்ஸ் #GoogleLens #IO17
Technology

அசத்தல் அம்சங்கள் வெளியாகும் கூகுள் லென்ஸ் #GoogleLens #IO17

கூகுள் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பாக கூகுள் லென்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் மேம்ப்பாட்டாளர்கள் கூட்டம் ஆண்டுக்காண்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான மேம்பாட்டாளர்கள் கூட்டம் அமெரிக்காவில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கூகுள் லென்சுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்டார். இந்த கூகுள் லென்ஸ் மூலம் ஒரு பொருளை நாம் கேமராவில் காட்டும் போது அந்த பொருள் பற்றிய விவரங்களை பெறலாம்.

அதாவது ஒரு பூவை கூகுள் லென்ஸ் காமிராவில் காட்டினால், அந்த பூவின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வரும். மேலும் ஒரு ஹோட்டலின் தோற்றைத்தை கூகுள் லென்ஸ் காமிராவில் காண்பித்தால் அந்த ஹோட்டலின் ரேட்டிங் என்ன ? அதில் என்ன பொருட்கள் கிடைக்கும் என்ற விபரங்களை கூகுள் லென்ஸ் தரும்.