புதுடெல்லி:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் செயலியான இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் பின்பற்றப்பட்ட (அதிக ஃபாலோவர்களை கொண்ட) உலக தலைவராக உள்ளார். சுமார் 6.9 மில்லியன் ஃபாலோவர்களுடன் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மிஞ்சியுள்ளார்.
தற்சமயம் வரை இன்ஸ்டாகிராமில் 101 போஸ்ட்களை நரேந்திர மோடி செய்துள்ளார். இந்த செயலியில் அவரது போஸ்ட்களுக்கு வரும் வரவேற்பை வைத்து இவர் உலகின் பயனுள்ள தலைவராக கருதப்படுகிறார். இன்ஸ்டாகிராமில் உலக தலைவர்கள் என்ற சர்வதேச ஆய்வில் அரசு பணியாளர்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் 325 இன்ஸ்டாகிராம் கணக்குகளின் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

சுமார் 6.3 மில்லியன் ஃபாலோவர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது இடம் பிடித்துள்ளார், போப் பிரான்சிஸ் 3.7 மில்லியன் ஃபாலோவர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். வெள்ளை மாளிகை கணக்கிற்கு 3.4 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர்.
ஆய்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்ட்களுக்கு சராசரியாக 2 லட்சத்து 23 ஆயிரம் லைக், கமென்ட்ஸ் கிடைப்பது தெரியவந்துள்ளது.
Add Comment