டூடுள் 4 கூகுள் என்ற போட்டியில் அமெரிக்க சிறுமியின் டூடுள் அனைவரையும் கவர்ந்துள்ளது. தன் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை டூடுளாக தயாரித்த சிறுமியின் டூடுளை சிறந்த டூடுளாக கூகுள் தேர்வு செய்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
கூகுள் நிறுவனம் நடத்தும் டூடுள் போட்டியின் இந்த ஆண்டிற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ‘டூடுள் 4 கூகுள்’ போட்டியில் இந்த ஆண்டு வெற்றியாளர் கணெக்டிகட் மாணவி சாரா ஹாரிசன் என கூகுள் அறிவித்துள்ளது.
ஹாரிசனின் டூடுளை கீழே காணலாம்.
எதிர்காலத்தில் நான் எதை பார்க்க வேண்டும் என்ற தலைப்பில் இந்த ஆண்டிற்கான டூடுளை மாணவர்கள் வடிவமைத்தனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு வெற்றியாளரான ஹாரிசன், ‘எனது எதிர்காலத்தில் மதம், பாலினம், சாதி உள்ளிட்டவைகளை கடந்து நாம் அனைவரும் மற்றவர்கள் மீது சமமாக அன்பு செலுத்த வேண்டும்’, என தெரிவித்துள்ளார்.
‘ஒருவர் எல்லா இடங்களுக்கும் எவ்வித அச்சமும் இன்றி செல்ல வேண்டும், அனைவரும் எல்லா இடத்திலும் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட லேண்டும்’, என்ற கனவு கொண்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹாரிசனின் டூடுள் அமெரிக்கா முழுக்க கூகுள் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் 30,000 அமெரிக்க டாலர்கள் உதவித்தொகை மற்றும் கூகுளின் மவுண்டெயின் வியூ தலைமையகம் சென்று டூடுள் குழுவினரை சந்திக்க முடியும். இத்துடன் உயர் கல்வியின் போது கூகுள் நிறுவனம் 50,000 அமெரிக்க டாலர்களை வழங்கும்.
இதேபோல் வயது அடிப்படையில் நான்கு பிரிவுகளில் கூகுள் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் 5,000 அமெரிக்க டாலர்களும், கூகுள் தலைமையகம் செல்லும் வாய்ப்பு மற்றும் குரோம்புக் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளது.