Technology

ஐஓஎஸ் அப்டேட் செய்தவர்களுக்கு ஆப்பிள் சர்ப்ரைஸ் இது தான்

சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் ஐபோன்களுக்கு அந்நிறுவனம் ஐஓஎஸ் 10.3 அப்டேட் சமீபத்தில் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் ஏர்பாட் சாதனங்களை டிராக் செய்து கண்டறியும் வசதியை வழங்கியது. இதோடு கிரிக்கெட் ஸ்கோர்களை சிரி ஆப்ஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டது.
இதே போன்று புதிய அப்டேட் மூலம் ஐபோனின் மெமரிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐபோன் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி மாடல்களில் அடிக்கடி மெமரி பிரச்சனை ஏற்படுவதையொட்டி புதிய வசதியின் மூலம் இந்த பிரச்சனை குறைக்கப்படுகிறது.
ஐஓஎஸ் 10.3 பதிப்பில் வழங்கப்பட்டுள்ள புதிய வகை ஃபைல் அமைப்பு APFS என அழைக்கப்படுகிறது. இந்த ஃபைல் அமைப்பு அனைத்து வித தரவுகளையும் வழக்கத்தை விட குறைந்த மெமரி அளவில் சேமித்து வைக்கிறது. இதனால் அதிகளவு மெமரி சேமிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக 256 ஜிபி ஐபோன் 7 மாடலில் ஐஎஸ் 10.3 அப்டேட் செய்யப்பட்ட போது 75.45 ஜிபியாக இருந்த மெமரி அளவு 83.26 ஜிபியாக அதிகரித்துள்ளது. புதிய அப்டேட் மூலம் 7.81 ஜிபி வரை கூடுதலாக கிடைப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 16 ஜிபி அல்லது 32 ஜிபி பயன்படுத்தும் போது இத்தகைய அளவு மெமரி கிடைக்காது.
எனினும், புதிய அப்டேட் மூலம் மெமரி அளவில் சற்றே கூடுதல் மெமரியை எதிர்பார்க்கலாம். புதிய ஐஓஎஸ் அப்டேட் ஆக 30-35 நிமிடங்கள் வரை ஆகும் என்றும், அப்டேட் நிறைவுற்றதும் ஐபோன் வேகம் அதிகரித்து இருப்பதாக பல்வேறு வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.