Technology

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ்: இதையாவது வாங்கலாமா?

மும்பை:
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் ஆறு மாதங்களை கடந்து மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ஜியோ பிரைம் திட்டத்தில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரைம் திட்டத்தில் ரூ.99 செலுத்துவதோடு கூடுதலாக ரூ.303 மற்றும் அதற்கும் அதிகமான விலையில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு ஜியோ புத்தாண்டு சலுகைகளை பெற முடியும்.
தற்சமயம் வரை சுமார் 7.5 கோடி பேர் ஜியோவை பயன்படுத்த கட்டணம் செலுத்திவிட்ட நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் ரீசார்ஜ் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் இண்டர்நெட் ட்ரெண்ட் ஆகிவிட்ட நிலையிலும் சிலருக்கு இதனை ரீசார்ஜ் செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பம் இருக்கத் தான் செய்கிறது.
ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை பெற மூன்று வழிகள்:
* இதுவரை ஜியோ சிம் வாங்காதவர்கள் அதை முதலில் வாங்க வேண்டும்
* ஜியோ பிரைம் திட்டத்தில் ஏப்ரல் 15-ந்தேதிக்குள் சேர வேண்டும்
* உங்களது ஜியோ எண்ணிற்கு ரூ.303 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும்
இவற்றை செய்ததும் உங்களது ஜியோ சிம் கார்டில் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்
ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் அறிவிப்புக்கு முன்னதாகவே நீங்கள் ஜியோ ரீசார்ஜ் செய்திருந்தால் உங்களுக்கும் இந்த சலுகை ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.
ரிலையன்ஸ் ஜியோவில் ரூ.303 செலுத்தினால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா உள்ளிட்ட சேவைகள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி வரை அதிவேக டேட்டாவும், அதன்பின் ஜியோ டேட்டா வேகம் நொடிக்கு 128 கேபி (128 Kbps) என்ற வாக்கில் இருக்கும்.
குறிப்பு:
முன்னதாக அதிகாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை வழங்கப்பட்ட அதிவேக அன்லிமிட்டெட் டேட்டா பயன்பாடு இனி வழங்கப்பட மாட்டாது.
இந்த சலுகை ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஜியோ பிரைம் திட்டமானது, ஜியோ புத்தாண்டு சலுகைகளை மார்ச் 2018 வரை வழங்கும். இத்துடன் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ செயலிகளின் பயன்பாடும் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரீசார்ஜ்களில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இலவசமாக வழங்கப்பட்டு வந்த ஜியோ சலுகைகள் மார்ச் 31-ந்தேதியுடன் நிறைவுற்றது.