சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளும் முளைக்கட்டிய பயிறு

  • எல்லா வகைத் தானியங்களையும் முளைகட்டி, மறுநாள் காலையில் தக்க பக்குவத்தோடு சாப்பிடுவது உயிர்ச்சத்து மிகுந்ததாய் இருக்கும்.
    1468424879-782

    வறுத்தோ, வேகவைத்தோ சாப்பிடுவதை விட முளைக்கட்டி சாப்பிடுவ்வதால் 90 பங்கு சத்து அதிகம் கிடைக்கிறது. அந்தந்தத் தானியங்களின் முளையிடும் காலம் அறிந்து முளைகட்டி சாப்பிடவும். அப்படிச் சாப்பிடுவது நல்லது.அப்படியில்லாமல் 4,5 தானியங்களை ஒன்றாக ஊற வைத்து முளைக்கட்டி சாப்பிடுவது அவ்வளவு சிறந்தது அல்ல. ஒரு நாளைக்கு ஒரு தானியமாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் ருசியாக இருந்தாலும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.தனித்தனியாகச் சாப்பிடும்போது சுவை தேவையென்றால் தேங்காய், வெல்லம், காரத்திற்கு மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.   இவ்வாறான தானிய உணவுகளைச் சாப்பிடும் போது காலை உணவுடனோ அல்லது மதிய உணவுடனோ சாப்பிட வேண்டும். இரவில் இதைச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.