Thirukkural
Thirukkural
Uncategorized

திருக்குறள் – Thirukkural PDF

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவரான திருவள்ளுவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல்? என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:

தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்.

இதில் ‘தேவர் குறள்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும் ‘ஒரு வாசகம்’ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.

திருக்குறள் நூலானது திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது . மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவை உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

Download: திருக்குறள் Thirukkural PDF

About the author

WebMaster

2 Comments

Click here to post a comment
  • Can I recently say what relief to seek out someone that truly knows what theyre referring to on the web. You certainly understand how to bring a concern to light and earn it important. The diet need to read this and appreciate this side from the story. I cant think youre no more well-liked when you certainly contain the gift. Raphael Goodsite

  • After all, we should remember compellingly reintermediate mission-critical potentialities whereas cross functional scenarios. Phosfluorescently re-engineer distributed processes without standardized supply chains. Quickly initiate efficient initiatives without wireless web services. Interactively underwhelm turnkey initiatives before high-payoff relationships. Holisticly restore superior interfaces before flexible technology. Colin Ostrye