பெண்களுக்கான அழகின் அடையாளங்களில் ஒன்றாக முடி கருதப்படுவதால் முடி உதிரும் பிரச்னைக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் முடி வளர்க்கும் ஷாம்பூ முதலான அழகு சாதனப்பொருட்கள் பெண்களை மையப்படுத்தியே அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இவை எந்த அளவுக்கு பயன்தரும் என்பதை பின்னர் பார்ப்போம். இந்த பதிவில் பெண்களுக்கு ஏன் முடி உதிரும் பிரச்னை வருகிறது என்று பார்ப்போம்.
தலையில் புண், பொடுகு பிரச்னை இருந்தால் முடி உதிரும். இது தீர்க்கக்கூடியதுதான்.
இரும்புச் சத்து, புரதம், வைட்டமின் போன்ற சத்துக்குறைவினால் முடி உதிரும். இதுவும் தீர்க்கக்கூடியதுதான்.
தைராய்டு சுரபி குறைவதால் முடி உதிரும். இது நாளாக நாளாக நிரந்தர முடி உதிர்தலை ஏற்படுத்தும்.
முடியின் வளர்ச்சியிலேயே வரும் சில பிரச்னைகள்
ஆண்கள் போல் பெண்களுக்கும் ஆன்ட்ரஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் முடி உதிரும்.
நீண்ட நாள் காய்ச்சல் கண்டிருந்தால் முடி உதிரும்.
உணவுக் கட்டுப்பாடு இருப்பதாலும் முடி உதிரும்.
லுப்பஸ் நோய் போன்ற தோல் நோய் வந்தாலும் முடி உதிரும்
முடி உதிரும் பிரச்னைக்கான தீர்வுகள்
தினமும் தலைக்குக் குளிக்க வேண்டும்.
முட்டை, பேரிட்சை பழம், கருவேப்பிலை, பருப்பு வகைகள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
தைராய்டு பிரச்னையால் வரக்கூடிய முடி உதிர்தலுக்கு அதற்குரிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு வருவதைப் போன்ற ஆன்ட்ரஜன் ஹார்மோன் பிரச்னைக்கு எப்போது நிறுத்த வேண்டும் என்பதை மருத்துவர் முடிவு செய்வார்.
முடி வளர்ச்சியில் ஏற்படும் பிரச்னைக்கு முடி பரிசோதனை செய்து காரணம் கண்டுபிடித்து அதற்கு ஏற்றாற்போல் மருத்துவம் செய்ய முடியும்.