சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்று இயற்பெயர் கொண்ட இவர் ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர்.
சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16ம் தேதி பிறந்தவர். சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து தனது படங்களில் கொடுத்து உலகைச் சிரிக்க வைத்த ஏழை.
இவரின் படங்கள் இன்றும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குழந்தைகள் இவரின் படங்களை விரும்பி பார்ப்பதை நாம் அறிவோம்.
தலையில் ஒரு கேப், குழந்தை தனமான சிரிப்பு, மூக்கிற்கு கீழே சின்ன மீசை, கையில் ஒரு தடி, குழந்தை தனமான நடனம், பிளாக் அன் ஒயிட் ஆடை என்று தனக்கென்று ஒரு அடையாளங்களை கொண்டவர்.
இவரின் பொன்மொழிகள் இன்றும் பலரால் பேசப்பட்டு வருகிறது. நகைச்சுவையால் நம் அனைவரையும் கவர்ந்த சார்லி சாப்ளின் 1977 டிசம்பர் 25ம் தேதி சாப்ளின் மறைந்தார்.
சாப்ளின் உலகை விட்டு பிரிந்தாலும், அவர் நடித்த படங்கள் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது பிறந்தநாளில் இந்த மகா கலைஞனை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்வோம்.