Cinema Tamil

அனுஷ்காவின் தங்கையாக மாறிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் என்றாலே காமெடியாக பேசுவார். சூரி போன்ற காமெடியன்களுடன் சேர்ந்து கொண்டு காமெடியாக, கிண்டலாக கதாநாயகிகளை கலாய்ப்பதுதான் அவரது ஸ்டைல் என்றாகி விட்டது. கிட்டத்தட்ட அவர் நடித்த வந்த எல்லா படங்களுமே இதே பாணியில்தான் இருந்தன. ஆனால், அந்த பாணியை மாற்ற வேண்டு என்று சிவகார்த்திகேயன் தற்போது எடுத்துள்ள முயற்சிதான் ரெமோ படம்.
இந்த படத்தில் நடித்துள்ள பெண் வேடத்துக்காக தினமும் 4 மணி நேரம் மேக்கப் போட்டு, அவரது தலையில் விக் அணிந்து ஏகப்பட்ட ஹேர் பின்களை குத்திதான் அந்த கெட்டப்புக்கு அவரை மாற்றுவார்களாம். ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்கிற வேகம் இருந்ததால் பொறுமையாக இருந்து அந்த கதாபாத்திரமாக மாறி நடித்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.
அதுபற்றி அவர் கூறுகையில், இந்த ரெமோ படத்தில் நான் எந்த கருத்தும் சொல்லவரவில்லை. இதுவும் ஒரு பொழுதுபோக்கு படம்தான். ஆனால், இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்துக்காக கொஞ்சம் அகதிகமாக உழைத்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் படம் என்றால் இப்படிதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு மாறுதலான அனுபவத்தை கொடுக்கும்.
இந்த படத்தில் பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற சொன்னபோதே பயந்து விட்டேன். பிசி.ஸ்ரீராம் உள்ளிட்டவர்கள் சொன்ன தைரியத்தில்தான் நடித்தேன். மொத்தம் 45 நாட்கள் பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். எனது கெட்டப்பைப்பார்த்து வெளியூர்களில் உள்ளவர்கள் யாரோ நடிகை என்றுதான் நினைத்தார்கள். சிலர் அனுஷ்கா தங்கையா? என்று கூட கேட்டார்கள். அதைதான் இந்த நர்ஸ் கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். மேலும், எனது மகளுக்கு கூட ரெமோ ஆன்ட்டி என்று சொன்னால்தான் என்னை தெரியும். அந்த அளவுக்கு அந்த கேரக்டர் அவளை பாதித்திருக்கிறது. அதனால் இந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.

image

Tags