Technology

கூகுளின் குரோம் செயலிகளுக்கு ஏற்பட்ட தடை:

கூகிளின்  குரோம் ஆப்ஸ்கள் இனி   விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் போன்றவற்றிற்கு கொடுத்து வந்த ஆதரவை நிறுத்த உள்ளது.

ஆம் இது 2018 லிருந்து அமலுக்கு வரும் என  கூகுள் குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த வருடத்திலிருந்து குரோமிற்கு சப்போர்ட் செய்யும் ஆப்ஸக்கள்  அனைத்தும் குரோம் பயனர்களால்  மட்டுமே பயன்படுத்த முடியும்.
chrome-os-on-samsung-chromebook
 கூகிள் இது முதல்  , குரோம்  பயன்பாடுகளை     ஹோஸ்ட்டட் ஆப்ஸ்   (hosted apps) மற்றும் பேக்கேஜ்ட் ஆப்ஸ்  (packaged apps)  என இரண்டு வகையாக வகைப்படுத்தி  வழங்கி வருகிறார்கள் இரு வகைகள் உள்ளன. ஹோஸ்ட்டட் ஆப்ஸ்  அதாவது   நிறுவப்பட்ட செயலிகள் , அனைத்து பயனர்களும் இணையத்தில்   உதவியுடன் பெறும்படியும் , பேக்கேஜ்ட் ஆப்ஸ் அதாவது தொகுக்கப்பட்ட செயலிகள்   ஒரு சதவிகிதம்   விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் பயனர்களால் பயன்படுத்தப்பட்டும்  வந்தது.  தற்போது குரோம் ஹோஸ்ட்டட் ஆப்ஸ் மற்றும் பேக்கேஜ்ட் ஆப்ஸ்களுக்கு கொடுத்து வந்த ஆதரவினை அடுத்த 2 வருடங்களுக்கு முற்றிலுமாக தடை செய்யவுள்ளது.   இதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு குரோம் செயலிக்கு  கொடுத்து வந்த சப்போர்ட்  அனைத்தும் நிறுத்தப்படுவதால் பயனர்கள் வேறு ஒரு மாற்று தீர்வை தேடும்  நிலை ஏற்படும்