Technology

ஆப்பிள் நிறுவனத்தை இந்தியாவிற்கு வரவேற்போம்: மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்

புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கும் பட்சத்தில் இந்தியா ஆப்பிள் நிறுவனத்தை வரவேற்கும் என மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஏற்கனவே உலக பிரபலமான பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது சாதனங்களை இந்தியாவில் தயாரித்து வருகின்றன, இதே போன்று ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் தயாரிக்க விரும்பினால், ஆப்பிள் நிறுவனத்தை வரவேற்போம் என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை விரைவில் சந்திக்கவுள்ள மத்திய அமைச்சர், ‘இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால் இந்தியாவில் சாதனங்களை தயாரிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்’, என அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 72 சர்வதேச நிறுவனங்கள் தங்களது சாதனங்களை இந்தியாவில் தயாரிக்க துவங்கி விட்டன. இதில் 42 நிறுவனங்கள் மொபைல் போன்களையும், 30 நிறுவனங்கள் பேட்டரி மற்றும் இதர பாகங்களை தயாரித்து வருவதாக அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.