manoj-kumar
manoj-kumar
Life History நடிகர்

மனோஜ் குமார்

மனோஜ் குமார் அவர்கள், இந்திய பாலிவுட் திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். அவர் நாட்டுப்பற்றை கருப்பொருளாக கொண்டு பல படங்கள் இயக்கி நடித்ததால், அவர் “திரு பாரத்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் திரைப்படத்துறையில் உயரிய விருதான “தேசிய திரைப்பட விருது” என மேலும் பல விருதுகளை பெற்று, இந்திய திரைப்படத்துறையில் இன்றளவும் சிறந்து விளங்கும் மனோஜ் குமாரின் வாழ்க்கை வரலாறு [...]

மனோஜ் குமார் அவர்கள், இந்திய பாலிவுட் திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். அவர் நாட்டுப்பற்றை கருப்பொருளாக கொண்டு பல படங்கள் இயக்கி நடித்ததால், அவர் “திரு பாரத்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் திரைப்படத்துறையில் உயரிய விருதான “தேசிய திரைப்பட விருது” என மேலும் பல விருதுகளை பெற்று, இந்திய திரைப்படத்துறையில் இன்றளவும் சிறந்து விளங்கும் மனோஜ் குமாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 24,  1937

இடம்: அபோதாபாத், பிரிட்டிஷ் இந்தியா (தற்போது பாகிஸ்தானில் உள்ளது)

பணி: நடிகர், இயக்குனர்

நாட்டுரிமை: இந்தியன்

 

பிறப்பு

ஹரிகிஷான் கிரி கோசுவாமி என்ற இயற்பெயர் கொண்ட மனோஜ் குமார் அவர்கள், 1937  ஆம் ஆண்டு ஜூலை 24  ஆம் நாள், அப்போதைய இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அபோதாபாத் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) என்ற இடத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பத்து வயதில், புது தில்லிக்கு இடம் பெயர்ந்த அவர், புது தில்லியிலுள்ள “இந்து கல்லூரியில்” (தில்லி பல்கலைக்கழகம்) சேர்ந்து கல்விக் கற்று, இளங்கலைப் பட்டமும் பெற்றார். பிறகு, திரைப்படத்துறையில் ஏற்பட்ட அதிக ஈடுபாடு காரணமாக தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்கு பிறகு திரைப்படத்துறையில் நுழைய முடிவு செய்தார்.

திரைப்பட வாழ்க்கை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலிப் குமாரால், ஹரிகிஷான் கிரி கோசுவாமி என்ற அவருடைய பெயரை ‘மனோஜ் குமார்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “ஃபேஷன்” திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய மனோஜ் குமார் அவர்கள், 1960 ஆம் ஆண்டு வெளியான “காஞ்ச் கி குடியா” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து “பஞ்சாயத்” (1958), “ஹனிமூன்” (1960),  “பியா மிலன் கி ஆஸ்” மற்றும் “ரேஷ்மி ருமால் (1961)” “ஹரியாலி அவுர் ராஸ்தா (1962), வோ கோன் தி (1964), ஹிமாலய கி கோத் மெய்ன் (1965) போன்ற மறக்கமுடியாத திரைப்படங்களை வழங்கினார்.

நாட்டுப்பற்று மிக்க நாயகனாக

பாரத தேசத்தின் மீது அதிக பற்று கொண்டவராக விளங்கிய அவர், தேசப்பற்று கதாபத்திரங்களில், மிகவும் உணர்ச்சி பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1965 ஆம் ஆண்டு பகத்சிங் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட “ஷாகித்” என்ற திரைப்படத்தில் ஒரு நாட்டுப்பற்று மிக்க நாயகனாக அவர் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த இயக்கத்தில் வெளியான “உப்கார்” என்ற திரைப்படம் இவரின் தலைச்சிறந்த படைப்பாக கருதப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் கல்யாண்ஜி-ஆனந்த்ஜி இசையமைப்பில் மகேந்திர கபூரால் பாடிய “மேரேதேஷ் கி தர்த்தி” என்ற பாடல் பாடல் மிகவும் புகழ்பெற்றது. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியத் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான “தேசிய விருதையும்” மற்றும் சிறந்த இயக்குனருக்கான “ஃபிலிம்பேர் விருதையும்’ பெற்றுத்தந்தது.

1970 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த திரைப்படங்கள்

1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பல வெற்றி படங்களை தந்த அவருக்கு, 1975 ல் வெளிவந்த “ரோட்டி கப்டா அவுர் மக்கான்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது மட்டுமல்லாமல், சிறந்த இயக்குனருக்காண இரண்டாவது “பிலிம்பேர் விருதையும்’ பெற்றுத்தந்தது. பிறகு, அதே ஆண்டில் வெளிவந்த “சன்யாசி” திரைப்படம், ஒரு மத பின்னணியிலான திரைக்கதையை கொண்டு அமைந்தது. ‘கிளார்க்’ (1989) மற்றும் ‘ஜெய் ஹிந்த்’ போன்ற திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும், 1998 ஆம் ஆண்டு ‘வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது’ வழங்கப்பட்டது.

பிற திரைப்படங்கள்

இதனை தொடர்ந்து, ‘பூரப் ஔர் பஷ்சிம்’ (1970),  ‘யாத்கர்’ (1970),  ‘பெஹ்சான்’ (1970), ‘மேரா நாம் ஜோக்கர்’ (1970), ‘பலிதான்’ (1971) , ‘ஷோர்’ (1972), ‘பே-இமான்’ (1972), ‘ரோட்டி கப்டா ஔர் மக்கான்’ (1974), ‘சன்யாசி’ (1975), ‘தஸ் நம்பரி’ (1976), ‘ஷீரடி கே சாய் பாபா’ (1977), ‘அமானத்’ (1977), ‘க்ரான்த்தி’ (1981), ‘கல்யுக் ஔர் இராமாயண்’ (1987), ‘சந்தோஷ்’ (1989), ‘கிளெர்க்’ (1989), ‘மைதான்-ஏ-ஜங்’ (1995)

அரசியல் வாழ்க்கை

மற்ற பாலிவுட் நட்சத்திரங்களைப் போல இவரும் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு’ நடைபெற்ற பொது தேர்தலில் “பாரதிய ஜனதா கட்சியுடன்” இணைந்து செயல்பட்டார்.

விருதுகளும் மரியாதைகளும்

  • 1968 ஆம் ஆண்டு “உப்கார்” என்ற திரைப்படத்திற்காக “இந்திய தேசிய விருதும்” நான்கு “ஃபிலிம்பேர் விருதும்” வழங்கப்பட்டது.
  • 1972 ஆம் ஆண்டு “பே-இமான்”, மற்றும் 1975 ஆம் ஆண்டு “ரோட்டி கபடா ஔர் மக்கான்” போன்ற திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
  • 1999 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநில அரசால் “தேசிய கிஷோர்குமார் விருது” வழங்கப்பட்டது.
  • 2009 ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே அகாடமியிடம் இருந்து ‘பால்கே ரத்னா விருது’ வழங்கப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டு மகராஷ்டிர மாநில அரசால் “தேசிய ராஜ்கபூர் விருது” வழங்கப்பட்டது.

மேலும் 1968ல் பி.எஃப்.ஜெ.ஏ விருதும், 2001ல் வாழ்நாள் சாதனையாளருக்கான கலாக்கார் விருதும், 2008ல் ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருதும், 2012ல் வாழ்நாள் சாதனையாளருக்கான அப்சரா விருதும், 2012ல் நாசிக் சர்வதேச திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது என மேலும் பல விருதுகளை பெற்ற மனோஜ் குமார் அவர்கள் இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குகிறார்.