Sports Uncategorized

இந்தியா- இலங்கை இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்: டாஸ் போடுவதில் தாமதம்

மைதானம் ஈரப்பதம் காரணமாக இந்தியா- இலங்கை இடையேயான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா,
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா, மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 9 போட்டிகளில் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி) வெற்றி பெற்று இலங்கையை புரட்டியெடுத்தது.
இப்போது சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் இந்திய அணியை அசைத்து பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி கம்பீரமாக வீறுநடை போடும் இந்திய அணி, அதை இந்த தொடரிலும் நீட்டிப்பதில் தீவிரமாக இருக்கிறது.
இந்த நிலையில், மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதமாக உள்ளது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.