Business Tamil

இந்த ஆண்டும் சம்பளம் உயராது.. சோகத்தில் ஐடி பணியாளர்கள்!

டெல்லி: இந்திய ஐடி துறையில் புதிதாக வேலைக்கும் சேரும் பணியாளர்களுக்கு, இந்த வருடமும் சம்பளம் உயர்த்தப்படாது என நாட்டின் முன்னணி ஐடி நிறுவனத்தின் மனித வளப்பிரிவு அதிராகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 7 வருடங்களில் ஐடித்துறையின் மோகம் மக்கள் மத்தியில் அதிகளவில் பரவியுள்ள காரணத்தினால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பேஷன் டெக்னாலஜி படித்தவர்கள் எல்லாம் தற்போது ஐடி துறையில் பணியாற்றுகின்றனர்.
இந்திய ஐடி நிறுவனங்களில் ஆட்டோமேஷன், இரண்டு இலக்க செலவீண குறைப்பு மற்றும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு போன்ற காரணங்களால் கடந்த 7 வருடமாகப் புதிதாக வேலைக்கும் சேரும் பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது.
நாட்டின் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், சிடிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் போன்ற நிறுனங்களிலும் இதே நிலைதான். பிரஷ்ஷர்களுக்கு 7 வருடமாகக் குறைந்த அளவிலான சம்பளம் மட்டுமே இந்த நிறுவனங்கள் வழங்கி வருகிறது.
2007-08ஆம் ஆண்டுக் காலத்தில் ஐடித்துறையில் சேர்ந்தவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள், வருடத்திற்கு 2.75 லட்சம் ரூபாய் சம்பளம் அளித்தனர், 7 வருடங்களுக்குப் பிறகு இதன் அளவு 3-3.5 இலட்சம் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த 7 வருட காலகட்டத்தில் நாட்டின் பணவீக்கம் 40-45 சதவீதம் வரை உயர்ந்ததுள்ளது. பணவீக்கம் உயர்ந்தால் நாட்டின் விலைவாசியும் உயரும்.
வருடத்திற்கு இந்தியாவில் 1.5 மில்லியன் அதாவது 15 லட்சம் இன்ஜினியர் மாணவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர். அவர்களில் 2,00,000 மாணவர்களுக்கு மட்டுமே இத்துறையில் வேலை வாய்ப்புக் கிடைக்கிறது.
தேவைக்கு ஆட்கள் குறைவாக இருக்கும்போது தான் சம்பளம் உயரும். தேவையே இல்லாமல் நிறுவனங்கள் ஆட்களைச் சேர்த்துக்கொண்டால் இது தான் விளைவு.
இத்துறையில் துவக்க நிறுவனங்கள் (Startup companies) இலட்ச கணக்கில் துவங்கப்பட்ட உள்ளது. இந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தைக் கேட்டால் கண்களில் தண்ணீர் தான் வரும்.