இ-காமர்ஸ் சேவையில் முக்கிய அங்கம் வகிக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் இந்த ஆண்டில் ஏற்கனவே சம்மர் சேல் என்ற பெயரில் கோடைக்கால விற்பனையை நடத்தியது. இதில், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் விற்கப்பட்டன. அதேபோல், இரண்டாவது முறையாக சம்மர் சேல் விற்பனையை அந்நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்களில், குறிப்பாக முக்கிய பிராண்டுகளின் ஏ.சி 30% தள்ளுபடியில் கிடைக்கின்றன. குறிப்பிட்ட பிராண்டுகளின் ஸ்மார்ட் போன்கள் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வாட்ச், கேமரா, ஹெட் போன், ஸ்பீக்கர் போன்ற அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் 30 முதல் 80% வரையிலான தள்ளுபடியில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், ஆன்களுக்கான ஆடைகள், ஷூ வகைகள், பெண்களுக்கான ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது.
வாடிக்கையாளர்களுக்கு உதவியாக மாதாமாதம் குறிப்பிட்ட பணம் செலுத்தும் இ.எம்.ஐ வசதி மற்றும் யு.பி.ஐ மொபைல் ஆப் வழியாக பணம் செலுத்தும் வசதி ஆகிய வழிமுறைகள் உள்ளன.
ஏற்கனவே, அமேசான் நிறுவனமும் இதே போல் வாடிக்கையாளர்களை குறிவைத்து கோடைக்கால விற்பனை திட்டத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.