Business

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை:
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம், மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியதாவது:-
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவே தொடரும். இதேபோல், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாக தொடரும்.
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் சரியாகி வருவதால் 2017-18 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் 7.4 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6-12 மாதங்களில் பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்களால் அடுத்த நிதியாண்டில் வட்டி விகிதம் உயரும்
என்று தெரிகிறது.
அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் முதல் அரையாண்டில் 4.5 சதவீதமாகவும், இரண்டாவது அரையாண்டில் 5 சதவீதமாகவும் இருக்கும்.
இவ்வாறு தெரிவித்தார்.