Cinema Entertainment Flash Tamil

எல்லை மீறிய விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை- கடும் அப்செட்டில் தலதளபதி

image

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையை விட பெரிது இந்த விஜய்அஜித் ரசிகர்களின் சண்டை. யார் எந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விட்டாலும், அதற்கு கீழ் கமெண்ட் பாக்ஸில் இவர்கள் ரசிகர்களின் சண்டை தான் இருக்கும்.

தற்போது புது ட்ரண்டாக ரெபரன்ஸ் என்று ஒரு கலாச்சாரம், சில இயக்குனர்கள் தங்கள் படத்தின் விளம்பரங்களுக்கு இவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். கதையின் மீது நம்பிக்கை இல்லாமல் விஜய், அஜித் பெயரை பயன்படுத்தி அவர்கள் ரசிகர்களை தியேட்டருக்கும் வரவைக்கும் ட்ரிக் தான் இது.

இதனால், பல லட்சம் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தையே மூன்றாம் உலகப்போராக ஆக்கிவிடுவார்கள், அதிலும் டுவிட்டரில் சண்டை இந்திய அளவில் ட்ரண்ட் அடிக்கும், இதையும் பெருமையாக பேசிக்கொள்வார்கள்.

ஒருவரை பற்றி புகழ்ந்து ட்ரண்ட் செய்தால் அதில் எந்த தவறும் இல்லை, ஆனால், மிகவும் மோசமான வார்த்தைகளை ட்ரண்ட் செய்வார்கள். இதன் மூலம் வட இந்தியர்கள் தமிழ் சினிமாவை பற்றி தரக்குறைவாக தான் நினைப்பார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த முறை விஜய் பிறந்தநாள் அன்று கூட அஜித் ரசிகர்கள் நெகட்டிவ் டாக்(TAG) ட்ரண்ட் செய்தனர், அவர்களிடம் இதுக்குறித்து கேட்டால், போன தல பிறந்தநாளுக்கு அவர்கள் செய்தது தான் என்று கூறுகிறார்கள், இதை விஜய் ரசிகர்களிடம் கேட்டால் முந்தைய தளபதிக்கு பிறந்தநாளுக்கு அவர்கள் செய்தது தான் என கன்னித்தீவு போல் செல்கின்றது.

உண்மையில் இதன் மூலம் ஒருவருக்கும் எந்த பயனுமில்லை, தற்போது இன்னும் ஒரு படி மேலாக வீடியோ வடிவில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது, அதுவும் மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசிக்கொள்வது, பள்ளி சிறுவர்கள் விஜய்யை திட்டுவது, அதை தொடர்ந்து ஒரு விஜய் ரசிகர் தியேட்டரில் அஜித்தை திட்டுவது என ஒரு சில வீடியோக்கள் உலா வருகின்றது.

இதை பெருமையாக நினைத்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர், உண்மையாகவே இது அவர்கள் நாயகர்களை அவர்களே அவமானம் செய்யும் விதம் தான் இந்த மாதிரி செயல்கள் எல்லாம், இந்த செய்தி கண்டிப்பாக தலதளபதி காதுகளுக்கு சென்றிருக்கும், வழக்கம் போல் அவர்கள் தரப்பில் அமைதி தான் பதில்.

ரசிகர்கள் இப்படி செய்ய வேண்டாம் என்று ஒரு அறிக்கை விட்டாலே போதும், உண்மையான ரசிகர்கள் பாதி பேர் திருந்திவிடுவார்கள், ஆனால், இவர்கள் இன்னும் அமைதி காப்பது எதற்கு என்று தான் தெரியவில்லை? இதுக்குறித்து சில நடுநிலையாளர்கள் தெரிவிக்கையில் ‘இதெல்லாம் ஒரு மார்க்கெட்டிங் ப்ளான் தான், கடைசி வரை ரசிகர்கள் அடித்துக்கொண்டே இருக்கவேண்டும், இது தான் அவர்களின் பலம், அது அவர்களின் படங்கள் வியாபாரத்திற்கு மேலும் வலு சேர்க்கும்’ என்று கூறுகின்றனர்.

எது எப்படியோ போட்டி ஆரோக்கியமாக இருப்பதை தான் தலதளபதியே விரும்புகின்றனர், நாளுக்கு நாள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்று காட்டுவதற்கு வித்தியாசமாக கலாய்க்கிறேன் என்ற பெயரில் உங்கள் நடிகர்களை நீங்கள் அசிங்கப்படுத்துகிறீர்கள், இதை தலதளபதியே விரும்பமாட்டார்கள், அவர்களுக்கே இது கடும் வருத்தத்தை தான் தரும்.